உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைகளில் திருப்தி இல்லையென பேராயர் கருத்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 18, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைகளில் திருப்தி இல்லையென பேராயர் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான ஒவ்வொரு விடயங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என சுட்டிக்காட்டிய கொழும்பு பேராயர், அந்த உரிமையை தலைவர்கள் நிலைநாட்டுவார்கள் என எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் பதிவாகியுள்ள விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தமக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.

ஆணைக்குழு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைந்தாலும், பாதுகாப்புத் தரப்பினர் இது தொடர்பில் உரிய முறையில் செயற்படுகின்றனரா என்பதை அறியமுடியவில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.