மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இரவு உணவிற்காக நிறுத்தப்படும் முஸ்லிம் கோட்டல்களில் தொடர்ந்து அசௌகரியங்களை சந்திக்கும் பிரயாணிகள்!!!
கல்முனை,மட்டக்களப்பிலிருந்து புறப்படும் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,திருகோணமலை போன்ற நீண்ட தூர பிரயாணங்களில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பிரயாணிகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய நிறுத்தும் உணவகங்கள் பெரும்பாலும் ஓட்டமாவடி ,ஏறாவூர் பகுதிகளில் நிறுத்தப்படுகின்றது .
இங்கு பிரயாணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் சுத்தமான உணவுகள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் அதற்கென்று தயாரிக்கப்பட்ட தூய ஆடைகள் அணிந்திருப்பது மிக குறைவு ,கழிவறை சுத்தம் கைகளை கழவ சவர்க்காரங்கள் இருப்பதில்லை இவை வழமையான நடைமுறை இவற்றை சாதாரணமாக எடுத்தாலும் உணவுகளிலும் அவை தயாரிக்க பயன் உபகரணங்களில் சுகதாரம் பேண வேண்டியது முக்கியமாகும் ,
சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கூட பாம்பு உணவுவகையால்தான் மனிதனுக்கு பரவியது என நம்பப்படுகின்றது.
இலங்கையில் எலி ,கரப்பான்,பூரான் போன்ற விசமுள்ள நோய் காவி உயிரினங்கள் அண்மைக்காலமாக ஓட்டமாவடி அரபா கோட்டலில் தெரிந்து வழங்குப்படுகின்றதா?? எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
நேற்று பயணித்த பிரயாணியின் ஓட்டமாவடி அரபா முஸ்லிம் கோட்டலில் சாப்பிடும் போது கொத்தில் எலி தலைதுண்டு காணப்பட்டது ,ஒரு கொத்தை இரண்டாக பிரித்து போடும் போது பலருக்கு செல்கின்றது.இதை கண்டவருடன் அந்த பிரச்சினை முடிவடைகின்றது.ஆனால் இவ்வாறன எலி போன்றவை உணவில் கலந்து புது புது நோய்களை உருவாக்கினால் பாதிக்கப்படுவது பிரயாணிகளே.
தற்போது ஒரு பேருந்தில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு கூட தெரிவு வைத்துள்ளார்கள் .ஆனால் தூர பிரயாணம் செல்லும் பேருந்துகளின் உணவிற்காக நிறுத்தும் உணவகங்கள் எவை என்று எந்த ஒரு தெரிவுயின்மை சாரதி நினைத்த இடத்தில் உண்ணலாம் என நிலை மாற்றப்பட வேண்டும் .இவ்வாற உணவகங்கள் அடிக்கடி பொதுச்சுகதார பரிசோதகர்களால் கண்காணிக்கப்பட வேண்டும் .மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரை இரவு நேரங்களில் உணவு பரிசோதனை நடைபெறாது எனும் துணிவுடன் கவனயீனமாக பழுதடைந்த பாவனைக்குட்படாதா உணவு வகைகளை வழங்குவதும் ஒரு காரணமாகும்.