பஸ்ஸில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, February 22, 2020

பஸ்ஸில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

தனியார் பஸ்ஸின் டயர்களில் சிக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் மஸ்கெலியா- நல்லதண்ணி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பொலிஸ் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றும் 40 வயதான அஜித் வீரசிங்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மதவாச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சிறப்பு கடமைகளுக்காக வருகைத் தந்ததாகவும், கடமைக்குத் வந்த முதல் நாளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.