இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவிற்கு அனைத்து முதல்வர்களையும் அழைக்க திட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 22, 2020

இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவிற்கு அனைத்து முதல்வர்களையும் அழைக்க திட்டம்!

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்துள்ளார்.

இராமர் கோயில் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் அயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. குறித்த கூட்டத்தினை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “அயோத்தியில் இராமர்கோயில் அமைக்கும் பணி வெகுச்சிறப்பாக தொடங்கும். இதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளோம்.

தொடக்க விழாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களையும் அழைக்கவுள்ளோம். அனைத்து தரப்பு மக்களையும் அனைத்து இராமர்கோயில் கட்டுமான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அறக்கட்டளையின் அடுத்த கூட்டத்தில் இதுபற்றிய விரிவாக ஆலோசனை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.