மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமானதால் கொலை செய்த கணவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 7, 2020

மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமானதால் கொலை செய்த கணவன்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அஜோரா என்ற நபர் தன் மனைவி மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்ததைக் கேட்டு அவரைக் கொலை செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோஸ் சாண்டோஸ் என்பவர் அழகுக் கலை நிபுணர். இவர் மார்செலோ அரோஜோ என்பவரைக் காதலித்து சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

பொருளாதார சூழல் காரணமாக அரோஜா இனிமேல் குழந்தை வேண்டாம் எனத் தன் மனைவியிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர் பேச்சைக் கேட்காத சாண்டோஸ் மீண்டும் மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார். இதைக் கணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதைக் கேட்டு உச்ச கோபத்துக்கு ஆளான அஜோரோ மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலிஸார் அஜோராவைக் கைது செய்துள்ளனர்.