வடக்கில் மாதமும் மும்மாரி கஞ்சா மழை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 22, 2020

வடக்கில் மாதமும் மும்மாரி கஞ்சா மழை!

வடக்கில் மழை பெய்கின்றதோ கஞ்சா பொதிகள் மட்டும் நாள் தவறாது வந்து கொண்டேயிருக்கின்றது.இன்றும் மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிருப்பு வசந்தபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேக நபர் ஒருவரும்; கைது செய்யப்பட்டுள்ளார்.

துள்ளுக்குடியிருப்பு வசந்தபுரம் பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை இலங்கை காவல்துறை மீட்தோடு,பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரையுமே கைது செய்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதி வய்ந்தவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பகுதியில் நெருக்கமான சோதனைகள் ஆரம்பிக்க யாழ்.வரத்தொடங்கிய கஞ்சா தற்போது யாழில் வேட்டை மும்முரமடைந்துள்ளதையடுத்து மீண்டும் மன்னார் வர தொடங்கியுள்ளது.