நகருக்கு சென்ற குடும்ப பெண்ணை காணவில்லை கணவன் முறைப்பாடு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 5, 2020

நகருக்கு சென்ற குடும்ப பெண்ணை காணவில்லை கணவன் முறைப்பாடு!

வவுனியா- மகாறம்பை குளம் பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு சென்றிருந்த குடும்ப பெண் ஒருவா் காணாமல்போயுள்ளதாக அவருடைய கணவா் சிறிலங்கா வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றாா்.

குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார். அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு அவரின் கணவர் தொலைபேசி

அழைப்பினை ஏற்படுத்திய சமயத்தில் அவரின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. அதன் பின்னர் அன்றைய தினம் மாலை வரை அவரை பல இடங்களில் தேடியும் குறித்த பெண்ணை காணவில்லை.

பின்னர் 30.01.2020 வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயத்தினை தெரிவித்து கணவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் இன்று வரை குறித்த பெண்ணை காணவில்லை.

கடைசியாக இவர் வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் இளஞ்சிவப்பு நிறத்திலான சாரி அணிந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.அவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.