ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை வியாழக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.
இதன்போது மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பத் தயாராகி வருகின்றன.
இன்றைய தினம் இலங்கையானது ஜெனிவா பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் நாளை நடைபெறவுள்ள விவாதத்தின்போது புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் பதிலளிக்கவுள்ளனர்.
அதேபோன்று மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக் களின் பிரதிநிதிகளும் இலங்கையின் புதிய நிலைப்பாடு தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.
இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெ ளியிட்டுள்ள நிலையில் அதன் சாரம்சத்தை 27 ஆம் திகதி பேரவையில் முன்வைப்பார். அதன் பின்னரே இலங்கை குறித்த விவாதம் நடைபெறும்.