யாழ் சிறுப்பிட்டி விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 13, 2020

யாழ் சிறுப்பிட்டி விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் இன்று (13) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முச்சக்கரவண்டி சாரதியும் சிறிய காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.