முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் கண்ணிவெடியொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையிர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது.
இது எல்.டீ.டீ.ஈ.யினர் தயாரித்த குண்டு என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.