யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விடுதியில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இன்று மதியம் அளவில் விடுதியில் கஞ்சாச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நான்கு சாடிகளில் குறித்த கஞ்சாச் செடிகள் காணப்படுவதாகவும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே அதனைப் பராமரித்து வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உதவிப் பதிவாளர் ஒருவரிடம் குறித்த கஞ்சாச் செடிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.