கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம், தமிழ் மக்களிடம், புத்திஜீவிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்று, நேற்று (19) நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.