எதிர்வரும் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவின் பரிந்துரையின் பேரிலும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட சிறு குற்றம் புரிந்தவர்களையே இவ்வாறு விடுவிக்கப்படுகின்றனர் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இந்த அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.