யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் இளம்பெண் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, February 5, 2020

யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் இளம்பெண் கைது!

இளவாலை பகுதியில் 26 கிலோ 198 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (04) மாலை 3.30 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.