காதலர் தினத்தை முன்னிட்டு கண்டியில் உள்ள பிரபல விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவிருந்த 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 18 பேரை தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுவரி திணைக்கள அதிகாரிகளின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 18 நபர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்தே, சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 18 பேரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, ஐஸ்ரக போதைப்பொருள் மற்றும் வேறு சில போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.