ராஜித CID யில் முன்னிலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 14, 2020

ராஜித CID யில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.



வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் சற்று முன்னர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பு பிரதம நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த பிணை உத்தரவில் குறைபாடு உள்ளதாகவும் எனவே அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் திருத்த விண்ணப்பத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது