‘ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம்’ – விண்ணப்பப் படிவங்கள் வழங்கும்போது அமைதியின்மை - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, January 24, 2020

‘ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம்’ – விண்ணப்பப் படிவங்கள் வழங்கும்போது அமைதியின்மை

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெறச் சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்காக நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் திரண்டனர்.

இதன்போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் வருகையைத் தொடர்ந்து சுமூக நிலையை அடைந்தது.

இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப் படிவங்களை சீராக வழங்குவதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மாத்திரம் ஏறத்தாழ 1500இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், குறித்த விண்ணப்பப் படிவங்களை நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, சொறிக்கல்முனை, சாளம்பைக்கேணி, மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.