சுன்னாக பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று நிலாவரை – ஈவினை பகுதியில் வைத்துத் தீயிட்டுக் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று (13) மீட்கப்பட்டுள்ளது.
கொளுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு, அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சுவேலி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்