ரஜினிகாந்தின் இலங்கை வருகை - வீசா நிராகரிக்கப்பட்டதா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 15, 2020

ரஜினிகாந்தின் இலங்கை வருகை - வீசா நிராகரிக்கப்பட்டதா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தருவதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவருக்கு வீசா வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டதாகவும், நாட்டின் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்தி பரவி வருகிறது.


இருப்பினும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடப்படுகிறது.

தற்போது வரை இலங்கைக்கு வருகை தருவது குறித்து ரஜினிகாந்த் தீர்மானம் எடுக்கவில்லை. அதேபோன்று அவர் வீசா பாத்திரங்களுக்கு விண்ணப்பிக்கவுமில்லை.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இடம்பெற்ற உலக தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட போது ரஜினிகாந்தை சந்தித்துள்ளதுடன், இதன்போது இலங்கைக்கு வருகைதருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இலங்கைக்கு வரும் திகதி குறித்து தீர்மானம் எடுக்கவில்லை.

குறித்த செய்தி வெளியான பின்னர், நாட்டில் சில இனவெறி ஊடகங்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்பு ரஜனியின் வருகையை நாசப்படுத்துவதற்காக போலி செய்திகளை உருவாக்கி வருகின்றன.