யாழ் மாநகரசபைக்கு இராணுவ கேணல் அதிகாரியை நியமித்தார் வடக்கு ஆளுனர்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 24, 2020

யாழ் மாநகரசபைக்கு இராணுவ கேணல் அதிகாரியை நியமித்தார் வடக்கு ஆளுனர்?


யாழ் மாநகரசபையின் விவகாரங்களை கையாளும் இணைப்பு அதிகாரியாக தென்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியொருவரை வடக்கு ஆளுனர் திருமதி சார்ல்ஸ் நியமித்துள்ளதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கில் தமிழ் ஓய்வுபெற்ற நிர்வாகசேவை அதிகாரிகள் இருக்கும் போது, வடக்கு பிரதேசத்தை அறிந்திராத சிங்களவரான இராணுவ அதிகாரியை, நியமித்தமை எதற்காக எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் குறித்த நபரை மாநகரசபை இணைப்பு அதிகாரியாக நியமித்தது, மாநகரசபையை கட்டுப்படுத்தவா என்றும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்.மாநகர சபை நிர்வாகத்தின் நடைமுறைகளில் ஒரு சில விடயங்களுக்கு மட்டுமே ஆளுநர்களின் அனுமதிக்காக செல்ல வேண்டிய நிலையுள்ளதாகவும் அவகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வரான நிலையில் குறித்த இணைப்பாளரின் நியமனமானது எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபை முன்னெடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும், செயற்றிட்டங்களுக்கும் ஆளுநரின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலையை உருவாக்கும் ஆபத்துள்ளதாக மாநகரசபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.