கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார்கள்.
நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த பணி புறக்கணிப்பிற்கு, இன்றைய தினம்வரை தமக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.