விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமராட்சி இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ரவீந்திரன் தனுசன் (22) என்ற இளைஞனே இன்று (20) உயிரிழந்தார்
வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தானை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் இந்த இளைஞன் படுகாயம் அடைந்திருந்தார்.
அல்வாய் கிழக்கு பத்தானை பகுதியில் உள்ள சகோதரனின் பிள்ளைகளுக்கு தைப்பொங்கல் தினத்துக்கு புதுபுடவைகள் வாங்க பணம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கியவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.