குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள  உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டது. 
இதன்போதே இவ்வாறு எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி இம்மனுவை  பரிசீலிக்க நீதியர்சர்கள் தீர்மானித்தனர்.