வன்னி புதையல்கள் பின்னணியில் சந்தேகம்? - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, January 10, 2020

வன்னி புதையல்கள் பின்னணியில் சந்தேகம்?

 வன்னியில் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படும் அகழ்வுபணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளில்  ஒன்றென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று வியாழக்கிழமை அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவுமே மீட்கப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தர் அலுவலகம் அமைந்துள்ள வாளாகத்திற்குள் தோண்டும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள்,தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள் காலை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக பல இடங்களிலும் இதே போன்று தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் எவையுமே அகப்பட்டிருக்கவில்லை.

இதேபோன்று கிளிநொச்சியிலும் படைமுகாமொன்றில் தேடுதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர் சிலர் அண்மையில் கைதாகியிருந்தனர்.

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது தகவல்களின் அடிப்படையிலேயே இத்தேடுதல்கள் நடப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது