கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுகிறது.என பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது. மலம்சலம் கழிக்க செல்கின்ற பொது மக்களும், வர்த்தகர்களும் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதோடு சிறுநீர் கழிக்கும் பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்பதனையும் காணக் கூடியதாக உள்ளது.
கரைச்சி பிரதேச சபையினர் சந்தையில் உள்ள வர்த்தகர்களிடம் நாளாந்தம் இவற்றுக்கெல்லாம் சேர்த்து வரிகளை அறவிட்டு வருகின்ற போதும் சந்தைiயினை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்வும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசலக் கூடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வைத்திருக்க பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அத்தோடு குறித்த மலசல கூடம் அமைந்திருக்கும் பகுதியில் மரக்கறி மற்றும் பழக்கடைகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது