ஓமந்தையில் மாட்டுடன் மோதுண்டு இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலி - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, January 7, 2020

ஓமந்தையில் மாட்டுடன் மோதுண்டு இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலி

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்று (06) இரவு 7.30 மணியளவில் ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய மதுரசிங்க என்ற இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.