பல்கலைக்கழக கல்வியை துறந்து சுய தொழிலில் சாதிக்க துடித்த இளைஞன் மின்தாக்கத்தால் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 3, 2020

பல்கலைக்கழக கல்வியை துறந்து சுய தொழிலில் சாதிக்க துடித்த இளைஞன் மின்தாக்கத்தால் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04) காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்த போது பண்ணைக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

மங்களதேவன் விஜயகுமார் (28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மாட்டு பண்ணை ஒன்றை நடாத்தி வந்துள்ளார். பண்ணையை காலை நீரினால் சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்போது மின்தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான குறித்த இளைஞன், பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டு பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்தார்.

இவரது முயற்சியினால் பண்ணையாளராக முன்னேறி வந்த இளைஞனின் மறைவு பிரதேசத்தை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது