விடுதலைப்புலிகள் எவரும் சிறையில் இல்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 31, 2020

விடுதலைப்புலிகள் எவரும் சிறையில் இல்லை!

உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சொல்வது உண்மையில்லை எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை(31) இடம்பெற்றது.

இதன் பின்னர் வட மாகாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது கருத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும்போது போராளிகளை வழிநடத்திய தளபதியாக இருந்த கருணா வெளியில் உல்லாசமாக இருக்கின்றார். போராடிய போராளிகள் உள்ளே இருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

அனந்தி சசிதரனும் ஒரு போராளியாக இருந்தவர் அவரும் தற்போது வெளியில் தான் இருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். சுமார் 12 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்தார்கள் அவர்கள் அனைவரது விடுதலையும் அன்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேசி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

தற்போது சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள். உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தவர்களும் ஆதரவு அளித்தவர்களுமே சிறையில் இருக்கின்றனர். அவர்களையும் படிப்படியாக விடுவிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்திருக்கிறார் என்பதை கூற விரும்புகின்றேன் என கூறினார்.