இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபாய வந்ததும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களிடம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
ஆணாதிக்கத்தில் பிடியில் வீட்டிற்குள் அடங்கி வாழ்ந்த அவர்கள், தற்பொழுது புதுமைப்பெண்களாக சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
மத கலாச்சாரம், பயம், கட்டுக்கோப்புக்கள் என்பவற்றுடன் வாழ்ந்த அவர்கள் தற்பொழுது வெளியில் வந்து சுதந்திரமாக செயல்படுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபாயவின் இலங்கையை அழகுபடுத்தல் என்ற தொனிப்பொருளில்நாடெங்கிலும் பரவலாக சுவரில் சிந்திரங்கள் பூசப்பட்டுவருகின்றது.
இதில் இளைஞர்கள் மற்று யுவதிகள் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்ற நிலையில், அவர்களுடன் முஸ்லிம் பெண்களும் சுவரில் சித்திரங்கள் வரைவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர்.
அது மட்டமல்லாது ஏப்ரல் மாத தாக்குதலிற்கு பின்னர் முஸ்லீம் பெண்கள் விகாரைகளிற்கு சென்று வழிபட்டனர் அதன் பின்னர் சிங்கக் கொடி - இராணுவசிப்பாய்கள் மற்றும் சிங்கள மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் படங்களை வரைகின்றமை பலராலும் வியப்பாக பார்க்க படுகிறது.
இந்நிலையில் , மதங்கள், சம்பிரதாயங்கள் என்பவற்றினை தாண்டி அவர்கள் இவ்வாறு பொது சேவைகளில் ஈடுபடுவதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.