எனக்கொரு வழிய சொல்லுங்க பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நபரின் மனைவி போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 8, 2019

எனக்கொரு வழிய சொல்லுங்க பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நபரின் மனைவி போராட்டம்!


பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட கொடூரன்களின் ஒருவரான சின்னகேசவலுவின் கர்ப்பிணி மனைவி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த வாரம் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகியோர் என் கவுண்டரில் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர் நேற்று அளித்த பேட்டியில் என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னையும் அவரை கொலை செய்த இடத்துக்கு அழைத்து சென்று கொன்று விடுங்கள் என கதறினார்.

நான்கு உடல்களையும் ஒன்றாக தகனம் செய்ய பொலிசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா, தாய் ஜெயம்மா மற்றும் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.அப்போது சின்னகேசவலுவின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்கள் விவசாய நிலத்தில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.