யாழில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அராலி கிழக்கு வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவத்தில் குகதீசன் நருஜன் (வயது-5) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.