வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை, இன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச, மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையின் எம் வார்டில் முன்னாள் அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 3.15 மணியளவில் ரணில் விக்கிரமசிங்க அவரை பார்வையிட சென்றார். சுமார் 30 நிமிடங்கள் சம்பிக்கவுடன் பேச்சு நடத்தினார்.
சஜித் பிரேமதாசவும் இன்று சிறை சென்று சம்பிக்கவை சந்தித்தார். இது தவிர, மனோ கணேசன், மயந்த திசநாயக்க, அஜித் பி பெரேரா உள்ளிட்டவர்களும் சிறை சென்று சம்பிக்கவை சந்தித்தனர்.