வடக்கில் மீண்டும் அடை மழை தொடரும் நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்த வண்ணம் காணப்படுகின்றதென கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்ற காரணத்தினால் இன்று இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரணைமடு குளத்திலிருந்தான நீர்வரத்து பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இதனிடையே அடை மழையின் மத்தியில் கிளிநொச்சியில் மின் ஒழுகினால் வர்த்தகர் நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.இதனால் சுமார் 3 கோடி இழப்பு வரையில் ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.