குடும்ப சொத்தானது இலங்கை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 12, 2019

குடும்ப சொத்தானது இலங்கை?

இலங்கையின் நிகழ் கால அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடபட 17 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இந்த 17 அமைச்சர்களும் 29 அமைச்சுக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஒவ்வரு அமைச்சுகுள்ளும் வரும் அரச நிறுவனங்கள் (மொத்த அரச நிறுவனங்கள் 445) தொடர்பான வர்த்தமானி வெளியிடப் பட்டு இருக்கிறது.

இவற்றுள் 156 அரச நிறுவனங்கள் ராஜபக்சே சகோதர்களுக்கு இடையே பகிர பட்டு இருக்கிறது.அதாவது 35 % வீதமான அரச நிறுவனங்கள் வெறும் 3 பேர்களுக்கு (மகிந்த, கோத்தபாயா மற்றும் சமல் ) இடையே பகிரப் பட்டு இருக்கிறது . மிகுதி 14 அமைச்சர்களுக்கு இடையே வெறும் 289 நிறுவனங்கள் பகிரப்பட்டு இருக்கிறது.


ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சே :பாதுகாப்பு அமைச்சு, 31 அரச நிறுவனங்கள்
பிரதமர் மகிந்த ராஜபக்சே நிதி பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு: 48 அரச நிறுவனங்கள், புத்தசன கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சு: 23 அரச நிறுவனங்கள்,நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் நீர் வளங்கள் அமைச்சு: 17 அரச நிறுவனங்கள்
அமைச்சர் சமல் ராஜபக்சே:மகாவலி கமத்தொழில் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு : 26 அரச நிறுவனங்கள்,உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சு: 11 அரச நிறுவனங்கள்