முன்னாள் பிரதி அமைச்சரரும் ராஜபக்க்ஷர்களின் விசுவாசியுமான கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதாவர்களில் இருவர் முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் என்றும், அவர்களிடமிருந்து ரி56 ரக ஆயுதம் ஒன்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மலேசியாவில் இருந்து இயங்கும் கும்பல் ஒன்றினால், அந்த குழு இயக்கப்படுவது ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன