போர் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் - சர்வதேச அழுத்தங்களை கணக்கிலும் எடுக்கமாட்டோம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 24, 2019

போர் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் - சர்வதேச அழுத்தங்களை கணக்கிலும் எடுக்கமாட்டோம்

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என கூறியிருக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா சர்வதேசத்தின் அழுத்தங்களை கணக்கில் கூட எடுக்கமாட்டோம் என கூறியுள்ளார். 

முன்னைய ஆட்சியாளர்களை போல சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என்றும் அதேபோன்று ஜெனிவா பிரேரணையை ஒரு­போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின்நகர்வுகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் கூறினார்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சி அர­சாங்கம் 

சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்தே ஆட்சி செய்தது என குற்றம் சாட்டிய அமைச்சர், சர்வதேச கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு சர்வதேச சக்திகளுக்கு முன்னாள் மண்டியிட்டு நாட்டினை தவறான திசையில் கொண்டு சென்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கத்தின் கொள்கை தேசியத்தை கட்டியெழுப்பும் கொள்கை என கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவான சிந்தனையில் உறுதியாக இருப்பதனால் நாம் சர்வதேச சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம். 

என உறுதியாக கூறினார்.அடுத்த ஆண்டு மீண்டும் ஜெனி­வாவில் இலங்கை விவகாரங்கள் கையில் எடுக்கப்படும் என்றும் இந்த புதிய அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில், சர்வதேச சக்திகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன என்றும் 

அவர் குற்றம் சாட்டினார்.இருப்பினும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது இராணுவத்தை பழிவாங்க நினைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.