தமிழர் மனதில் எப்போதுமே காட்டி கொடுத்த கருணாவே - அடித்துத் துவைத்த யூ.எல்.என். ஹுதா உமர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 24, 2019

தமிழர் மனதில் எப்போதுமே காட்டி கொடுத்த கருணாவே - அடித்துத் துவைத்த யூ.எல்.என். ஹுதா உமர்

கண்களை இறுக மூடிக்கொண்டு உலகம் இருட்டிவிட்டதாக நினைத்து கருணா செயல்படுவதாக தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தமிழ் மக்களின் 2000 ஏக்கா் காணிகளை இரவோடிரவாக அபகரித்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தற்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களினால் காட்டி கொடுப்பாளராகவும், தமிழின அழிப்பு துரோகியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட கருணாவின் அண்மைய கால கருத்துக்கள் முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைமைகளையும் வெகுவாக தாக்குவது போன்று அமைந்துள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற வேண்டும் என்பதை காரணமாக கொண்டு இவ்வாறான காட்டுமிராண்டி அறிக்கைகளை கருணா விடுவதாகவும், எனினும் அதை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அபகரிக்கவேண்டிய எவ்வித தேவையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களுக்கு இருக்கவில்லை என்றும் உமர் குறிப்பிட்டுள்ளார்.

இணைந்த வடகிழக்கை பிரிப்பதிலும் நாட்டை சீரழித்த பயங்கரவாதிகளை அழிப்பதிலும் அக்கறையாக இருந்தவர் முஸ்லிம் மக்களின் தலைவன் அதாஉல்லா என்றும், அவர் மீது சேறு பூசி மீண்டும் இனவாதத்தைத் தூண்டி தமது அரசியலில் கெட்டியாகப் பயணிக்க கருணா அம்மான் முயற்சி செய்வது சிறுபான்மை இன மக்களுக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத முத்திரையை அகற்றி ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்க கருணா இன்னும் பழக்கப்படவில்லை என்பதனை அவர் அறிக்கைகளாக விடும் ஒவ்வொரு செய்தியும் சொல்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள முஸ்லீம் மக்களின் சொத்துக்களை அபகரித்து யார் ? அந்த மக்களை இரவோடு இரவாக விரட்டியடித்தது யார்? முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க திட்டமிட்டு முகாம் அமைத்து முஸ்லீங்களிடம் கப்பம் அறவிட்டது யார்? என்பதை உலகமே நன்றாக அறிந்து வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வேண்டிய நாசகார கருமம் எல்லாவற்றையும் திட்டமிட்டு அரங்கேற்றிவிட்டு இப்போது வாக்குவங்கியை தக்கவைக்க வாய்க்கு வந்ததையெல்லாம் கருணா உளறுவதாகவும் தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்துள்ளார்.