யாழில் இரு காவாலிக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட போதுல்!! ஒருவன் வெட்டி வீசப்பட்டான் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 4, 2019

யாழில் இரு காவாலிக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட போதுல்!! ஒருவன் வெட்டி வீசப்பட்டான்

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மற்றும் பாசையூரைச் சேர்ந்த இரு காவாலிக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டு வந்த முரண்பாடு வாள் வெட்டில் முடிந்துள்ளது. இன்று காலை பாசையூரைச் சேர்ந்த ஒருவனை நாயன்மார்கட்டுப்பகுதியைச் சேர்ந்த காவாலிகள் ஆட்டோவில் கடத்தி விநாயகர் வீதிப்பகுதியில் பிரடிப்பகுதியில் வாளால் வெட்டி வீசிவிட்டுச் சென்றதாக தெரியவருகின்றது.

 குறை உயிரில் துடித்துக் கொண்டிருந்த இளைஞனை பொலிசார் மீ்ட்டுச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ்.கல்வியங்காடு பகுதியில் கேமி குழுவின் தலைவரின் சகோதரனை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டு காயங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீசியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அந்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்போது 26 வயதுடைய இளைஞரே வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலையினால், மற்றைய குழுவினர் கொலை செய்திருக்கலாமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: one or more people and outdoor Image may contain: one or more people, shoes, outdoor and nature