திருகோணமலை நோக்கி பயணித்த சிறிய ரக சொகுசு பேருந்தொன்று சம்மாந்துறையில் இன்றைய தினம் விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த பேருந்து சம்மாந்துறை வீரமுனை ஆண்டியடிச் சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகிற்கு அருகேயுள்ள வாய்க்காலுக்குள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்