முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டிலேயே மறைந்திருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்களே அபி அமைப்பு அறிவித்துள்ளது.
இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவ்வமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் இதனைக் கூறியுள்ளார்.