மட்டக்களப்பில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட கேவலமான தந்தை! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, December 7, 2019

மட்டக்களப்பில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட கேவலமான தந்தை!

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று வெள்ளிக்கிழமை, (06) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். 

வெல்லாவெளி பொலிஸ்பிரிவின் கீழ் உள்ள 4ம்கொலனி வம்மியடி திக்கோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கூலித்தொழிலாளியான தந்தை கடந்த ஐனவரி மாதத்திலிருந்து தனது 8 வயதான சிறுமியை கடந்த 26ஆம் திகதி வரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். 


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவதினமான நேற்று இரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.