நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஏற்பட்ட பாரிய விபத்து! 6 பேர் வைத்தியசாலையில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 16, 2019

நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஏற்பட்ட பாரிய விபத்து! 6 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 94ம் கட்டை பகுதியில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியும் வேனொன்றும் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான 1990 அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளியொருவரை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது திருகோணமலையை நோக்கி சென்றுகொண்டிருந்த வேனொன்று மோதியதினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டியில் பயணித்த சாரதி, உதவியாளர் மற்றும் நோயாளி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வேனில் பயணம் செய்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்து 6 பேரும் தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.