கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (07) காலை பத்து மணிக்கு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இறுதிவரை 35 அடியாக வைத்திருப்பது எனவும், கடந்த வருட அனுபவத்தின் அடிப்படையில் இத்தீர்மானத்தை மேற்கொள்ளவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, டிசம்பர் மாதத்திற்கு பின்னர் சில வேளைகளில் மழை பெய்யக் கூடும் என்றும் எனவே அதன் பின்னர் 36 அடியாக நீரை சேமிப்பது என்றும் இன்றையக் கூட்டத்தி்ல் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும்- அதாவது 14 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.