வெள்ளக்காடாகும் கிளிநொச்சி: 2,404குடும்பங்களை சேர்ந்த 7,762 பேர் பாதிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 7, 2019

வெள்ளக்காடாகும் கிளிநொச்சி: 2,404குடும்பங்களை சேர்ந்த 7,762 பேர் பாதிப்பு!

கிளிநொச்சியில் நேற்றிரவு( வியாழன்) முதல் இன்று (வெள்ளி) காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்க்கியுள்ளன.

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்வை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


இதில் கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குமும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 என நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குமும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


இதனை தவிர பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின்பிரதான குளமான இரணைமடு குளத்திற்கு நீர்வரவு அதிகமாக காணப்பட்டமையினால் 31 அடியாக நீர் மட்டம் காணப்பட்ட போது குளத்தின்இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிறிய குளங்களும் நிரம்பி வான் பாய்கின்றன.