கிளிநொச்சியில்15 வயது மாணவி தற்கொலை!! மற்றுமொரு சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 20, 2019

கிளிநொச்சியில்15 வயது மாணவி தற்கொலை!! மற்றுமொரு சம்பவம்!

கிளிநொச்சி யூனியன் குளம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன்-கார்விழி(கயல்) எனும் மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.கோணாவில் அ.த.கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார். அம்மம்மாவினுடைய வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் மாணவி நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூண்று மணியளவில் திரும்பி வந்துள்ளார். மாணவியின் அம்மம்மா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்திலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“எனக்கு வாழ பிடிக்கவில்லை அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என கடிதம் எழுதி வைத்துவிட்டே தூக்கிட்டு இறந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கு ஒருவழியாவது இருக்காதா என்று தேடுங்கள்…….

தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது..