முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல்,ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.
மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன.
இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது.