இராணு ஆட்சியை நோக்கி ஶ்ரீலங்கா: ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக ஆணையிறவில் அடிவாங்கிய மேஜர் ஜெனரல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 24, 2019

இராணு ஆட்சியை நோக்கி ஶ்ரீலங்கா: ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக ஆணையிறவில் அடிவாங்கிய மேஜர் ஜெனரல்

ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக, இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளாரென செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1971ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர்.

ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்டபோது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை அவர் ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தார்.

மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.