தூக்கம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அத்தியாவசியமான செயற்பாடு ஆகும்.
இது உடல் ஆரோக்கியத்தை சீராக பேண உதவுவதுடன், பாதிப்புக்களிலிருந்து உடலை மீட்டெடுக்கவும் உதவும்.
எனவே சிறந்த தூக்கம் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
எவ்வாறெனினும் இரு வகையானவர்களை ஒரு போதும் தூக்கத்திலிருந்து இடையில் எழுப்புதல் சிறந்ததன்று.
ஒன்று குழந்தைகள் மற்றையவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள்.
குழந்தைகள் ஒருபோதும் ஆழமான தூக்கத்தை மேற்கொள்வதில்லை. அனேகமான நேரங்களில் விழித்து இருப்பார்கள்.
எனினும் கிடைக்கும் நேரங்களில் குறுகிய காலத்திற்கு நித்ரை செய்வார்கள்.
இவ்வாறான தருணங்களில் அவர்களின் தூக்கத்தை கலைக்கக்கூடாது.
அவ்வாறு செய்தால் குழந்தைகளின் சீரான செயற்பாடு பாதிக்கப்படும்.
அதேபோன்றே நோய்வாய்ப்பட்டவர்கள் சிறந்த தூக்கத்தினை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அந்நோயிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு இயற்கையாகவே கிடைக்கின்றது.
எனவே இவர்களையும் இடைநடுவே தூக்கத்திலிருந்து எழுப்புவது சிறந்ததல்ல.
மீறி எழுப்பும்போது அவர்களின் மன அழுத்தமானது அதிகரிக்கக்கூடும்.
இதனால் நோயிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பும் குறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்கையில் பயத்தில் இருப்பவர்களோ அல்லது பசியுடன் இருப்பவர்களோ அப் பிரச்னைகளுக்கு தீர்வுகண்ட பின்னரே தூக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பயத்தில் இருப்பவர்கள் தூங்கும்போது தூக்கத்தில் மேலும் பயமுறுத்தக்கூடிய கனவுகள் வரலாம். இது அவர்களின் சீரான தூக்கத்தை கெடுத்துவிடும்.
எனவே குறித்த பிரச்னைக்கு தீர்வு வழங்கப்பட்ட பின்னர் தூக்கம் செய்வது சிறந்தது.
அதேபோன்று பசியுடன் தூங்கும்போது அது மனதளவில் தளம்பலை ஏற்படுத்தக்கூடும்.
அத்துடன் ஆழமான தூக்கத்தினையும் தடுக்கும்.
தவிர உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இதனால் ஒரு நாளும் வெறும் வயிற்றுடன் தூங்கக்கூடாது.