யாழ்,நாவலர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 13, 2019

யாழ்,நாவலர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

காங்கேசன்துறையிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்,பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.