ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கோட்டாபயவினை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் மீள ஆரம்பிக்கப்படும்.
தொழில்வாய்ப்புகளை கருத்தில்கொண்டு தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என கோட்டாபய உறுதிமொழி வழங்கியுள்ளார். அவை நிறைவேற்றப்படும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.